ஊரெங்கும் பூசம் தைப்பூசம்
ஊரெங்கும் பூசம் தைப்பூசம்
பாரெங்கும் வேலன்மீது பாசம்
காவடிகளைத் தூக்கியபடி ஆட்டம்
கரவொலியைத் தட்டியப்படி பாட்டம்
(ஊரெங்கும் பூசம்...)
நல் அறுபடை வீடுகளிலோ கோசம்
நெல் அறுவடை வீடுகளிலோ சோகம்
அருள் வேண்டிடும் அரோகராவிலோ வேகம்
பொருள் வேண்டும் அரோகராவிலோ தாகம்
(ஊரெங்கும் பூசம்...)
தண்ணிப் போட்டதும் பாடுது சில தைப்பூசக் கூட்டம்
தண்ணிப் பிடித்ததும் வாடுது பல விவசாயக் கூட்டம்
கஷ்டத்தைப் போக்க இஷ்டப்பட்ட வேலோடு கோயிலிலே கூட்டம்
நஷ்டத்தைக் போக்க கஷ்டப்பட்ட நெல்லோடு வயலிலே கூட்டம்
(ஊரெங்கும் பூசம்...)
வேண்டியதைக் கொடுக்கும்போது வெற்றி வேலனாக்குவார் முருகா
விளைந்ததைக் கெடுக்கும்போது ஆண்டி வேலனாக்குவாரே முருகா!
(ஊரெங்கும் பூசம்...)
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment