நம் தாயின் மொழி
அம்மா அப்பா கொடுத்த மொழி
அன்போடு வீரம் படைத்த மொழி
ஆன்மிகம் வளர்த்துக் காத்த மொழி
ஆற்றலை வளர்த்துக் காக்கும் மொழி
இனிமையை கனியாகக் காட்டிய மொழி
இன்னாததை காயாகக் காட்டும் மொழி
உண்மையை உரைக்க உற்ற மொழி உரிமையைப் பறைக்கவும் ஏற்ற மொழி
ஊழ் வினையை விளக்கிய மொழி
ஊக்க உணர்வையும் விளக்கும் மொழி
எல்லா மொழிக்கும் மூத்த மொழி
எல்லா மதத்திற்கும் ஒத்த மொழி
ஏகாதிபத்தியத்தை ஏற்காத மொழி
ஏகபத்தினியை ஏற்கும் மொழி
ஐந்தாகக் காப்பியங்களைத் தந்த மொழி
ஐந்தாக நிலங்களையும் தந்த மொழி
ஒப்புமைக் கொண்டு வாழ்த்திய மொழி
ஒவ்வாமைக் கண்டு வீழ்த்திய மொழி
ஔவையின் கவித்துவம் கொண்ட மொழி
ஔனத்தில் உடல் நலம் கண்ட மொழி
ஃகை குறளில் வெஃகாமையாகக் கண்ட மொழி
ஃகை இரும்பில் எஃகாகக் காணும் மொழி!
- தஞ்சை த.இராமநாதன்

Arumai.
ReplyDelete🙏🙏
ReplyDeleteமிக்க அழகு அன்னை தமிழுக்கு முதல் வணக்கம்
ReplyDelete🙏🙏
ReplyDelete