Wednesday, 24 January 2024

கொலைகளும் கொள்ளைகளும்

 

கொலைகளும் கொள்ளைகளும் 

கவனித்துக் கொள்ள முடியாதவர்கள்
முடியாதவர்களைக் கவனத்துடன்                  கொல்வதற்குப் பெயர் என்ன?

முரண் பிடிக்கும் மூத்த முடியாதவர்களை
முரண் பிடித்தே மூச்சை முடித்து                          வைப்பதற்குப் பெயர் என்ன?

நொடித்த உறவுடன் கச்சிதமாக நடித்து
வாய்ப்புக் கிடைத்தால் உடலை ஒடித்து நுடமாக்குவதற்குப் பெயர் என்ன?

கன்று நட்டு மரமாக்கினாலும் பலனை
நன்றி மறந்த நாய்போல் செயல்பட்டு        அனுபவிப்பதற்குப் பெயர் என்ன?

உடல் நலம் நாடி மருத்துவரிடம் போனால்
நியாயமற்ற மருத்துவர் பணத்தை
கறப்பதற்குப் பெயர் என்ன?

உரிமைக்காகப் போராடும் உணர்வைச்            சூழ்ச்சியால் நாசமாக்க நினைத்தால்                        அதற்குப் பெயர் என்ன?

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment