உலகத்தில் இருப்போர் அனைவருக்கும் இருக்கலாம் தாய்மொழி
உலகத்தின் மொழிகளிலெல்லாம் அம்மாவாக இருப்பது தமிழ்மொழி
எந்த மொழியும் தமிழுக்கு இணையாகா என்பதை அனைவரும் அறிவோம்
இந்தி மொழி என்றும் இணையாகாது என்பதையும் அனைவரும் அறிவோம்
இந்தா இந்தா எனச் சொல்லி ஏந்தி ஏந்தி பிடித்தாலும் அலைவது வீணே
தமிழ் தமிழ் எனச் சொல்லித் தாங்கித் தாங்கிப் படித்தால் வாழ்வது தானே
எம்மொழியையும் எவரும் படிக்கட்டும் பாரினில் இன்றும் இப்போதும்
நம்மொழியை நாம் யாவரும் படிப்போம் பாரினில் என்றும் எப்போதும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment