குணம் படைத்தவரிடத்தில் பணம் இல்லாமல் போவது எதனால்?
பணம் படைத்தவரிடத்தில் குணம் இல்லாமல் போவது எதனால்?
படித்தவரிடத்தில் படித்ததற்கான எந்த தகுதியும் இல்லாதது எதனால்?
தகுதியான நபரிடத்தில் படிப்பதற்கான வாய்ப்பே இல்லாததும் எதனால்?
பேசத் தெரிந்தவரிடத்தில் அர்த்தமே இல்லாமல் இருப்பது எதனால்?
அர்த்தம் தெரிந்தவரிடத்தில் பேசத் தயக்கம் இருப்பதும் எதனால்?
லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தும் லட்சியம் நிறைவேறாதது எதனால்?
ஆயிரம் பத்தாயிரமெனச் சம்பாதித்தும் பத்தாமல் பரிதவிப்பதும் எதனால்?
எதை எதனாலென எம்மாலோ இதை இதனாலென உம்மாலோ
அதை அதனாலென நம்மாலோ
சொல்லித் தீர்ப்பது எந்நாளோ!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment