Wednesday, 19 March 2025

வெய்யிலும் மழையும்

 

ஏழ்மையைப் போல் வாட்டி விடுவது கொடுமையான வெய்யிலின் செயல்
செழுமையைப் போல் காட்டி விடுவது கடுமையான மழையின் செயல்

வெய்யிலைக் கண்டு வெளியில் செல்ல தயக்கம் காட்டுவோர் அதிகமில்லை
மழையைக் கண்டு வெளியில் செல்ல தயக்கம் காட்டுவோர் குறைவுமில்லை

வெய்யிலைச் சமாளிக்க வெறும் நீரைக் கொண்டே சமாளிக்க முடிம்
மழையைச் சமாளிக்க வெந்நீரைக்    கொண்டா சமாளிக்க முடியும்?

பலநாள் கொளுத்தும் வெய்யிலின் சூடோ இரவில் அடங்காமல் இல்லை
ஒரேநாளில் கொட்டும் மழையின் பாடோ
இரவிலும் அடங்குவதாக  இல்லை!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment