Friday, 12 November 2021

முக்கோண வடிவில் தமிழர் முறம்

 

முக்கோண வடிவில் தமிழர் முறம் 

உலைக்குப் போகுமுன் முறம் கொண்டு புடைத்தால் உமியும் தூசியும் பறக்கும்
புடைத்த அரிசியைக் கொழித்தால் அது குருணையைப் பக்குவமாய்ப் பிரிக்கும் 

அக் குருணை கஞ்சியுமாகி மிஞ்சினால் கோழி குஞ்சுகளுக்கு நற் தீனியாகும் 
புடைப்பட்ட அரிசியில் கலந்தக் கல்லைப் பிரித்தால் நெல் அரிசி நல் அரிசியாகும் 

முறம் கொண்டு புடைத்துக் கொழித்து மும்முரமாய் இருப்பார் தமிழ்ப் பாட்டி  
கற்களைப் பார்த்துப் பிரித்து எடுத்து பம்பரமாய் இருப்பார் தமிழ்த் தாத்தா 

பக்கத்தில் நிற்கும் சேவலுக்கு இரண்டு அரிசியைப் போடச் சொல்வார் பாட்டி 
பக்கத்தில் நின்றாலும் அது பக்கத்து வீட்டு சேவல் என்பதை அறிவார் தாத்தா!

- தஞ்சை த இராமநாதன்

1 comment: