முதலில் உதவியும் முதல் உதவியும்
முடியாதவருக்கு முதலில் உதவுவதோடு முதல் உதவியாகவும் இருத்தல் சிறப்பு
முடிந்தவர் முடிந்தவரை முடியாதவருக்கு
முடிந்ததை முடித்துக் கொடுத்தல் சிறப்பு
எதிரியும் எதிர்பாரா உதவியை எதிரியிடம் எதிர்பாராமல் உதவுதல் அதிச் சிறப்பு
எதையும் செய்யும்போது இதயத்தோடு எதார்த்தமாகச் செய்தல் தனிச் சிறப்பு
எல்லா உயிரையும் சொந்த உயிராக
எல்லா நிலையிலும் பாவித்தல் சிறப்பு
எந்த ஊரையும் தன் சொந்த ஊராக
எல்லா ஊரிலும் நினைத்தல் சிறப்பு
வேலைக்காக வேலை செய்யாமல் நல்
சேவைக்காக வேலை செய்தல் சிறப்பு
வேலையில் வேறு வேலை செய்யாமல்
சேவையைச் செய்தது சிறப்போ சிறப்பு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment