பிரித்தாளும் சூழ்ச்சியால் வீழ்ச்சியே
ஐந்தில் அருமையான சகோதர உறவு பத்தில் பகைமையான பங்காளி உறவு
ஐந்தில் அன்புடன் உறுதியான உறவு இருபதில் வம்புடன் எதிரியான உறவு
நியாயம் இல்லாதது பாகப் பிரிவினை பகையை வளர்ப்பது பாகப் பிரிவினை
வஞ்சகம் செய்வது பாகப் பிரிவினை அன்பை முறிப்பது பாகப் பிரிவினை
வீட்டில் ஆரம்பமாகும் பிரச்சினை இது வீதியில் தொடரும் பிரச்சினை இது
சாதியில் கலக்கும் பிரச்சினை இது சமாதியில் நிலைக்கும் பிரச்சினை இது
பிரிந்த நாளை நினைத்து சிரிப்பதா? இருந்த நாளை நினைத்து அழுவதா?
கடந்ததைப் பெருமையாக நினைப்பதா? நடந்ததைக் கொடுமையாக நினைப்பதா?
இருக்கும் மதத்தைப் பிரிப்பது யார்? புதிதாகப் பெயரை சூட்டுவது யார்?
பிரித்தே பிணைப்பைப் பேசுவது யார்? பிரிந்தே இணைப்பைப் பேசுவது யார்?
பிரிக்கத் தெரிந்த மனமே உனக்கு இணைக்கத் தெரியாதா?
பிரியத் தெரிந்த மனமே உனக்கு இணையத் தெரியாதா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment