தள்ளாடுது தாலாட்டிய உள்ளம்
காய்ந்துப் போய் சுடும் ஆறாக இருந்தது கரைப் புரண்டோடும் வெள்ளக் காடானது
ஓய்ந்துப் போய் உறங்கிய ஊரெல்லாம் பயந்துப் போய் கலங்கிப் பீதியானது
இருந்த இடமும் நிலையாக இல்லை போகும் இடமும் நிலையாக இல்லை
தூக்க முடியாமல் தூக்கிப் போகின்றேன் மேலும் தாக்கினால் சாய்ந்துப் போவேன்
இருந்ததையும் இழந்ததால் அழுவதா? பிழைத்ததே போதுமென அழுவதா?
வாழ்ந்ததுப் போதுமென அழுவதா? இனி எப்படி வாழ்வதென அழுவதா?
பிள்ளைகள் எனக்குப் பிறந்தது பாவமா? என் மேல் இயற்கைக்குக் கோபமா?
என்னை எடுத்துக் கொள் என் இறைவா பிள்ளைகள் வாழ வழி கொடு இறைவா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment