எங்கெங்கும் வேண்டும் கோவில்
எல்லாக் குடிகளுக்கும் முன் தோன்றிய மூத்தக் குடி கட்டியக் கோவில்கள் பல இக்கோவில்களைக் கண்டே மற்றைய சமூகங்கள் கண்டன வழிகள் பல
தான் சிறு குடிசையில் வாழ்ந்தாலும் கடவுளை கோபுரத்தில் வைத்தது என் வம்சம் என் வம்சத்திடம் எவர் வாலை ஆட்டினாலும் என் கடவுள் செய்திடுவார் எவரையும் தும்சம்
மேள சத்தம் கேட்கட்டும் கோவிலெங்கும் தேவையற்ற ஓசை ஓயட்டும் ஊரெங்கும் நாட்டு அழுக்கை அகற்றட்டும் வெள்ளம் இறைவன் அருளைப் பெறட்டும் உள்ளம்
கோயில் இல்லாத ஊரில் வாழ்ந்தால் தமிழ்ப் பரம்பரைக்கு ஏற்படும் பெரும் இழுக்கு கோயிலைக் குறை கூறி சுற்றித் திரிந்தால் தமிழர்ப் பண்பாடாட்டிற்கும் ஏற்படும் இழுக்கு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment