இளைய வள்ளுவர் வருந்துகிறார்
வாய்மையே வெல்லும் என சொன்னது
பொய்மையே வெல்லும் என்றானதேன்?
அகத்தின் தூய்மை அறவே மறக்கப்பட்டு
புறத்தின் மாயை மேலென ஆனதேன்?
கற்ற நெறியைப் பின்பற்ற மறுத்து பிழைத் தொற்றி முற்றியதேன்?
கற்றவர் கண்ணே கண் என்பது போய் கல்லாதவர் புண்ணே கண்ணானதேன்?
ஆசிரியரிடம் பணிந்துப் படித்தது மாறி ஆசிரியர்களே சிலர் பாவிகளாகிப் போனதேன்?
கற்ற நல்லவர்களின் வல்லமை மாறி
கல்லாக் கயவர்களின் பொல்லாமை வந்ததேன்?
கற்றார்க்கு எல்லாமே தன் ஊரென்பது மாறி
காசு பெற்றார்க்கே அது என்றானதேன்?
புண்தான் இறைச்சி எனக் கூறியும்
புண்ணை ரசித்து ருசித்துப் புசிப்பதேன்?
உயிரினும் மேலானது ஒழுக்கம் ஆனால்
மானம் போகும் அளவிற்கு ஒழுக்கம் கெட்டதேன்?
குணம் சிறந்து மனம் மாறச் சொன்னால்
மனம் நாறி என்னையும் மதம் மாற்றிப் பேசுவதேன்?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment