உலகப் பொருளாதார மாயமாக்கல்
கஞ்சியைப் பானையில் சமைத்து உப்பிட்டு ருசித்து சுவைத்துச் சாப்பிட்டது ஏழைப் பொருளாதாரம்
கஞ்சியைக் குழைத்து கட்டியாக்கி கரண்டி வைத்து கொஞ்சிச் சாப்பிடுவது கோழைப் பொருளாதாரம்
பாரம்பரியத்தோடு உழைத்துக் கிடைத்ததை சாப்பிட்டு வயிறு நிறைய மகிழ்வுடன் வாழ்ந்தது நியாயமானப் பொருளாதாரம்
கண்டதைத் தின்றுக் குடித்து வயிறைப் பெருக்க வைத்து நலத்தைக் கெடுத்து வாழ்வது அநியாயமானப் பொருளாதாரம்
இருக்கும் காசை வைத்து சிக்கனமான வாழ்வைக் கொடுத்தது பெருமிதமான உண்மைப் பொருளாதாரம்
இல்லாதக் காசை இருப்பதாக நினைக்க வைத்து சிக்கலான வாழ்வைக் கொடுப்பது பொய்யானப் பொருளாதாரம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment