தனியான அனுபவம்
வளமான மலைமேலே இதமான குளிராலே பாடி மகிழ்ந்தனக் குயில்கள் தெளிவான வான்மேலே மிதமானக் காற்றாலே தேடி அலைந்தன முகில்கள்
பொழியப் போகும் சற்று முன்னே புதுப்
பொலிவைப் பெற்றன மேகக் குவியல்கள்
பொழிவில் நனையப் போகும் முன்னே
தோகையை விரித்து ஆடின மயில்கள்
கொடிய மிருகங்கள் அவ்விடம் இல்லே கடுந்தவம் செய்தேன் குடிலின் உள்ளே
வயிற்றுப் பசி அவ்விடம் அறவே இல்லே
ஆனந்தம் அடைந்தேன் என் உள்ளே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment