வருடந்தோறும் வரும் மே தினம்
தொழிலாளி அதிகரித்தால்
தொழிலாளியை வைத்து
பிழைப்பாளி அதிகரிப்பதும்
உழைப்பாளி அதிகரித்தால்
உழைப்பாளியை வைத்து
ஏய்ப்பாளி அதிகரிப்பதும்
போராட்டம் அதிகரித்தால்
போராட்டத்தை வைத்து
பேர ஆட்டம் அதிகரிப்பதும்
இம் மே தினம் வந்ததும்
இம் மே தினத்தை வைத்து
இம்மே எனக் கத்துவதும்
உலகெங்கும் மாறாதோ என்றும்?
- தஞ்சை த.இராமநாதன்

👍🙏🙏
ReplyDelete🙏🙏
Delete