Monday, 26 June 2023

நரியும் பரியும் சமமாக முடியாது

நரியும் பரியும் சமமாக முடியாது

ஒழுக்கம் உள்ளாரும்
ஒழுக்கம் இல்லாரும் சமமில்லை

உழைத்துக் களைப்பாரும்
உழைக்காது இருப்பாரும்  சமமில்லை

வேளையில் தூங்கி எழுவாரும்                              காலையில் தூங்கி விழுவாரும் சமமில்லை

பெரியோரை அவமதிப்பாரும்                                பெரியோரை மதிப்பாரும் சமமில்லை

பார்த்ததும் வணக்கம் சொல்லுவோரும்
வணக்கம் சொல்லாதாரும் சமமில்லை

முகத்தில் பொய்யாக நடிப்பாரும்
அகத்தில் மெய்யாக துடிப்பாரும் சமமில்லை

மானம் காத்து வாழ்வோரும்
மானம் அழித்து வீழ்வோரும் சமமில்லை

குறையோடு கூத்தாடும் குறை குடமும்              குறையில்லா நிறை குடமும் சமமில்லை

மறைந்திருந்து ஊளையிடும் நரியும்
மகிழ்ந்தோடும் பரியும் சமமில்லை!

- தஞ்சை த.இராமநாதன்




No comments:

Post a Comment