மாறும் பயணத்தில் மாறாப் பயணம்
பாலகன் விடலையானான்
பதின்மக்கலை முகத்திலேறி
விடலை காளையானான் திருமணமாலை கழுத்திலேறி
காளை மாளியானான்
மனக்கவலை மனதிலேறி
மீளி மறவோனான்
நரைத்தமுடி தலையிலேறி
மறவோன் திறவோனான்
வாய்மூடி மவுனத்திலேறி
திறவோன் முதுமகனாகிப்
போனான் பாடையிலேறி!
- தஞ்சை த.இராமநாதன்

உண்மை
ReplyDelete🤝🤝
Delete