எருமையின் அருமை
எருமை நம் சொந்த வீட்டில் உயிரோடு பொறுமையாய் அருகில் இருந்தபோது எருமையின் பெருமை அருமையென நமக்கு அப்போது புரியவேயில்லை
எருமை எந்த நாட்டில் இப்படி உயிரற்று சிலை எருமையாய் இருந்தபோதும் புதுமையான எருமையே பெருமையென நமக்கு இப்போது புரியாமலும் இல்லை
தண்ணீருள் முழுதாய் மூழ்கியும் நீந்தியும் கரை சேர்த்த உள்ளூர் எருமையின் அருமை நாம் வறுமையில் இல்லாது இருந்தபோது நமக்கு அப்போது புரியவேயில்லை
தண்ணீரில் மூழ்கவோ அல்லது நீந்திக் கரை சேரவோ இயலாத நிதி வறுமையை சிலை எருமை மூலமாக உணர்த்தப்படுவதை நமக்கு இப்போது புரியாமலும் இல்லை!
- தஞ்சை த இராமநாதன்

Arumai.👍
ReplyDelete🙏
Delete