தடியெடுத்து தாவிக் குதித்து கம்பைச் சுழற்றி சுத்தியவர்கள் தடியாகிப் போனதுமில்லை அடியெடுத்து நடக்க மறுத்து குண்டாகிப் போனவர்கள் தடியாகாதுப் போனதுமில்லை
தடியெடுத்து தண்டல்காரனாக சுற்றியவர்கள் தண்டமாகாதுப் போனதுமில்லை
அடித்து ஆக்கிரமித்து அடுத்தவரைக் கெடுத்து வாழ்ந்தவர்கள் வீழ்ந்து போகாதுப் போனதுமில்லை
தடியெடுத்து சிலம்பமாடி மரபோடு சுத்தியவர்கள் நல்ல ஆட்டக்காரரென பெயரெடுக்காதுப் போனதுமில்லை அடிக்காதில் துளையிடாது ஆபரணம் அணிந்துத் திரிந்தவர்கள் குலப் பெயரை கெடுக்காதுப் போனதுமில்லை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment