பழத்தின் பலம் பழத்தில்
பழுத்த பழத்தை வெட்டித் துண்டாக்கிக்
கடித்ததும் இனித்தால் பலமென்பார்கள்
வெட்டுண்டுத் துண்டாகித் துவண்டு அழுகாது இருந்தால் பழமென்பார்கள்
அடுத்தவர் உழைப்பை உறிஞ்சித் தளிர்த்ததைத் திறமை என்பார்கள் உழைத்தவர் களைத்து வருந்தித் தவிப்பதை மடமை என்பார்கள்
வெள்ளம் வருமெனத் தெரிந்ததும் துன்பம் வருத்துகிறது என்பார்கள்
வெள்ளம் வடியுமெனத் தெரிந்ததும்
இன்பம் நெருங்குகிறது என்பார்கள்!
- தஞ்சை த.இராமநாதன்

இது பலம்பெரும் பழம்.
ReplyDelete🤝🤝
Delete