ஒற்றுமை-பொறாமை-வேற்றுமை
கா காவெனக் கரைந்து கூட்டிக் கூடி உணர்வோடு உண்டால் காகங்கள்
வான் வெளியில் ஓடிக் கூடிச் சேர்ந்து குளிரோடு பொழிந்தால் மேகங்கள்
லொள் லொள்ளென கூடிக் குரைத்துக் கடித்துக் குதறிக் கொன்றால் நாய்கள்
சர் சர்ரென வேகம் கூட்டிக் குறைத்து மோதிக் கொன்று செத்தால் பேய்கள்
உணர்வோடும் உரிமையோடும் கூடிக் கொண்டாடும் வாழ்வில் மெய்கள்
வேற்றுமையோடும் பொறாமையோடும் ஆடி அடங்கிடும் வாழ்வில் பொய்கள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment