Friday, 26 December 2025

கடக்கும் ஆண்டு கடந்த ஆண்டாகும்

 

கடக்கும் ஆண்டு கடந்த ஆண்டாகும்

ஓர் ஆண்டைக் கடக்கப் போவதை எண்ணி எப்படிக் கடந்தோமென எண்ணினால் என் மனம் துள்ளுகின்றது
ஓர் ஆண்டில் இறந்தோரின் கணக்கை எண்ணி எண்ணிய எண்களால் என் கண்கள் கலங்குகின்றது

துரோகங்களை எண்ணினால் அதைத் துரத்தித் தூரமாக ஒதுக்கி ஒதுங்கி ஓங்காரமாய் ஒலிக்கச் சொல்கின்றது
தியாகங்களை எண்ணினால் வீரமாகத் தீரமாக நினைத்துப் போற்றிப் புகழ்ந்து கையோடு கைகோர்க்கச் செல்கின்றது

பாவங்களைப் போக்க பரிகாரத்தைவிட
தியானத்தைச் செய்து மனம் அமைதி பெற தூண்டுகின்றது
நடந்ததைப் பாடமாகக் கற்று நடக்கப் போவதை தேர்வாக எண்ணி தேர்ச்சி பெற தோன்றுகின்றது!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment