Tuesday, 2 December 2025

அணில் கடித்தால் அது கனிந்த கனி

 

உண்ணலாம் என மனிதன் எண்ணாத வரை அணில் பழத்தை உண்ணலாம்
உண்ணலாம் என மனிதன் எண்ணிய முதல் அணில் பழத்தை எண்ணலாமா?

காயை உண்டு கனியை உண்டு மீனை உண்டு மானையும் உண்பார் மனிதர்                                    காய்த்தது கனியும்வரை காத்திருந்து கனிந்தபின் உண்ணுவார் அணிலார்!

உண்டதை உண்டு உண்ணாததையும் உண்டு வாழ எண்ணும் மனித மனமே...
உண்டபின் உண்ண உணவில்லா அணிலையும் உண்பது சரியா இனமே?

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: