Saturday, 6 December 2025

தலைமுறை தலைமுறையாக

 

தலைமுறைக்குத் தலைமுறை தடம்மாறுகிற மாற்றம்
தலைமுறைக்குத் தலைமுறை தடுமாறுகிற மாற்றம்

தலைமுறையைத் தலைமுறை தவறாது ஏமாற்றும்
தலைமுறைக்குத் தலைமுறை தவறாது ஏமாறும்

உடலும் உணர்வும் சுருங்கி அடங்கிப் போவது ஒரு தலைமுறை
உண்மையும் உரிமையும் சுருங்கி அடங்கப் போவது மறு தலைமுறை

கொடுத்துக் கொடுத்து கெட்ட பெயரை எடுத்து ஓய்கின்றது ஒரு தலைமுறை
எடுத்து எடுத்ததைத் தொலைத்து அலைய போகின்றது மற்றொரு  தலைமுறை!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment