எங்கே எப்படி இருந்தாலும் பெற்றப்
பிள்ளை அழக் கேட்டால் அதிர்ந்தோடி கட்டிப் பிடித்துத் தூக்கும் தாயின் செயல் தொப்புள் கொடி பந்த பாசப் பிணைப்பால்
தன்னோடு பிறந்த தம்பிகளை தங்கைகளைத் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்து நடந்தும் ஓடியும் விளையாடியது பாசப் பிணைப்பால்
ஒரே மூக்கு இலையில் சுற்றி அமர்ந்து சிரித்துப் பேசி இனிப்புப் பொங்கலை சுவைத்து ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்து உறவாடியது பாசப் பிணைப்பால்
அம்மா அப்பாவை பண்போடு மதித்து உரிமையோடு சிற்சிறு சண்டையிட்டு கடமை தவறாது கவனித்துப் பேணிக் காத்து வாழ்ந்தது பாசப் பிணைப்பால்
எத்தனை வயதானாலும் பெற்றோர் இறந்தால் அய்யோவென அலறித் துடித்து தேம்பித் தேம்பிக் கண்ணீர் தீரும்வரை அழுதது பாசப் பிணைப்பால்
தாயில்லாப் பிள்ளையாயினும் உடலில் அடிபட்டால் அடுத்த நொடியே அம்மா எனக் கத்துவதும் பாசப் பிணைப்பால்
தாயில்லாததை உணர்ந்தாலும் வலியைத் தாங்காது அய்யோ அம்மா எனக் கதறிக் கண்ணீரில் நனைவதும் தாயின் பாசப் பிணைப்பால்!
- தஞ்சை த.இராமநாதன்

👌👍👍👍🤝🤝
ReplyDelete🙏🙏
ReplyDelete