Thursday, 26 January 2023

வாங்க வாங்கிப் போங்க

 

வாங்க வாங்கிப் போங்க

வங்கிக்கு கடனை வாங்கப் போங்க
கடனாளிப் பெயரை வாங்கிப் போங்க
பள்ளிக்கு படிப்பை உள்வாங்கப் போங்க
படித்து நற்பெயரையும் வாங்கிப் போங்க

காசோடு பொருளை வாங்கப் போங்க
பாக்கியை மறவாது வாங்கிப் போங்க
போட்டியில் பரிசை வாங்கப் போங்க பரிசோடு பெயரையும் வாங்கிப் போங்க

மருத்துவரிடம் மருந்து வாங்கப் போங்க பொறுத்து இருந்து வாங்கிப் போங்க
தியானத்தில் நிம்மதி வாங்கப் போங்க
மன ஆனந்தத்தையும் வாங்கிப் போங்க

கடற்கரைக்கு காற்றை வாங்கப் போங்க காற்றின் இதத்தையும் வாங்கிப் போங்க
பூக்கடைக்கு பூவை வாங்கப் போங்க      பூவின் வாசத்தையும் வாங்கிப் போங்க!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment