Sunday, 20 March 2022

சின்னச் சின்ன சிட்டே

 

சின்னச் சின்ன சிட்டே

பட்டெனப் பறக்கும் சின்னச் சிட்டே!
சட்டெனப் பறக்கும் வண்ணச் சிட்டே!
கூடு கட்டத் தெரிந்த சின்னச் சிட்டே!
கூடி வாழத் தெரிந்த வண்ணச் சிட்டே!

தேனுக்காக திட்டமிடும் சின்னச் சிட்டே!
பூவுக்காக நோட்டமிடும் வண்ணச் சிட்டே!
அழகான அலகுடைய சின்னச் சிட்டே!
அரிதான நிறமுடைய வண்ணச் சிட்டே!

பன்னிசையில் பாடும் சின்னச் சிட்டே!
பால்கனியில் பாடும் வண்ணச் சிட்டே!
உலகெங்கும் மகிழ்வுடன் பாடும் சிட்டே!
உலகம் மகிழவும் பாட்டைப் பாடு சிட்டே!

- தஞ்சை த இராமநாதன்


1 comment: