Monday, 21 March 2022

நினைவில் நிற்கும் மாமரங்கள்

 

நினைவில் நிற்கும் மாமரங்கள்

கல்யாணப் பந்தலில் பழுத்து விழுந்த எங்க வீட்டு வாசல்-மாமரப் பழம் சிறப்பு
எங்க களத்தருகே காயிலேயே சிவந்தக் கொத்தான செந்தூராப் பழம் சிறப்பு
எங்க போரடி நொண்டி மரத்தில் காய்த்த
பெரிய உருண்டைப் பழம் சிறப்பு
எங்க மேலக் கொல்லை நீலம் மரத்தின் காய் தரையை தட்டிய விதம் சிறப்பு
இளம் மரத்தில் ஏராளமாய்க் காய்த்த எங்க வீட்டு ஒட்டுப் பழம் அதி சிறப்பு
உயரமான மரத்தில் சடை சடையாய்க் காய்த்த கரண்டக் காச்சிப் பழம் சிறப்பு
அசைத்தால் விழும் பெரியம்மா வீட்டு சர்க்கரைக் காச்சிப் பழம் சிறப்பு
அம்மாச்சி வீட்டு பெரிய ஒட்டு மரம் ஆயிரக் கணக்கில் காய்த்தது சிறப்பு
அடை மாங்காயாக அலாதி சுவையைத் தந்த தாத்தா வீட்டு மா சிறப்போ சிறப்பு!

- தஞ்சை த இராமநாதன்


1 comment: