Tuesday, 22 March 2022

விழ விடாது விழுது

 

விழ விடாது விழுது

படர்ந்து விரிந்து குளிரான நிழல் தரும் ஆலமரம்
பறவைகளுக்கு சிவந்தப் பழம் தரும் ஆலமரம்
அடித்தூர் அகலமாகப் பெருக்கும் ஆலமரம்
அடிவேர் நல்ல ஆழத்துடன் இருக்கும் ஆலமரம்

பால் வடியும் இலையுடன் ஆலமரம்
பல் வலியைக் குணமாக்கும் ஆலமரம்
கிளைகள் வழி விழுதை விடும் ஆலமரம்
விழுது வழி விழாது நிற்கும் ஆலமரம்

போத்தை ஊனி வைத்தால் மரமாகும் ஆலமரம்
கோயில் குளம் ஆறு வீதியென எங்கும் ஆலமரம்
எங்கக் குளத்தோரம் பழம்பெரும் இரு ஆலமரம்
எங்க அய்யாவு தாத்தா வைத்துக் காத்த ஆலமரம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment