இன்று வானிலை தினம்
வான் நிலை வானிலை அது ஒவ்வொரு தினமும் மாறும் நிலை
வான் நிலை வானிலை இன்று அதன் தினமாகவே மாறிய நிலை
வான் நிலை வானிலை அது சில நேரம் பூமியைக் குளிரூட்டும் நிலை
வான் நிலை வானிலை அது சில நேரம் பூமியைச் சூடாக்கும் நிலை
ஆகவே,
பூமியைப் பார்த்து வானம் சொன்னது அதிகம் சூடாகி விடாதே!
உடனே,
வானைப் பார்த்து பூமி சொன்னது என்னை சூடாக்கி விடாதே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment