முன்னோக்கியப் பயணம்...
இங்கிருந்து அங்கே சென்றால் அது முன்னோக்கியப் பயணம்
அங்கிருந்து இங்கே வந்தால் அதுவும் முன்னோக்கியப் பயணம்
எங்கே போகிறோமெனத் தெரிந்தால் முன்னோக்கியப் பயணம்
எதற்குப் போகிறோமெனத் தெரிந்தால் முன்னோக்கியப் பயணம்
இறந்து முடிந்து பிறந்துத் தொடருவது முன்னோக்கியப் பயணம்
இறப்பு முடிந்து பிறப்பும் முடிந்தால் அதுவே முழுமையுறும் பயணம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment