Saturday, 19 March 2022

மூன்று மூன்றும் ஒன்றே

 

மூன்று மூன்றும் ஒன்றே

வேரில்லாது தனியாக வளரும் தண்டில்லை
தண்டில்லாது தானாகக் கனியும் கனியில்லை

உடலில்லாது அகத்தினுள் மகிழும் மனமில்லை
மனமில்லாது கடன் தீர்ந்து விடுபடும் ஆன்மாயில்லை

உயிர்மெய் இல்லாது மெய்யாக மெய்யில்லை
மெய்யில்லாது உணர்வோடு வாழும் உயிரில்லை!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment