கண்ணீர்...கண்ணீர்
காலணிப் போட்டு பசியால் அழுதவர் கண்ணீரும் உண்டு
காலணிப் போட காலே இல்லாதவர் கண்ணீரும் உண்டு
கண்ணீரைப் பார்த்து பதறிக் கலங்காது இருப்போரும் உண்டு
கண்ணீரைப் பார்த்துக் கலங்கி பதறித் துடிப்போரும் உண்டு
கண்ணீரைப் போக்க முடிந்ததை உடனே செய்வோரும் உண்டு
கண்ணீரை மறைக்க உடனே குளிக்கச் செல்வோரும் உண்டு
பிறப்பை எண்ணி கண்ணீர் விடுவோர் எங்கெங்கும் உண்டு
இறப்பை எண்ணி கண்ணீர் விடுவோர்
எங்கெங்கும் உண்டு!
- தஞ்சை த இராமநாதன்
👍👍👍
ReplyDelete