Thursday, 17 March 2022

வங்கிகளும் வாங்கிகளும்

 

வங்கிகளும் வாங்கிகளும்

பணம் வாங்கச் செல்லுது ஒரு கூட்டம்
பணம் போடச் செல்லுது ஒரு கூட்டம்
பத்தாமல் வாங்குது ஒரு கூட்டம்
பதுக்காமல் போடுது ஒரு கூட்டம்

வாங்கியவருக்கு கடனால் திண்டாட்டம்
போட்டவருக்கு வட்டியால் கொண்டாட்டம்
கடனை வாங்கும்போது பணக் கஷ்டம்
கடனை அடைக்கும்போது மனக் கஷ்டம்

வங்கி உறவு வங்கியோடு முடியும்
வாங்கி ஓடும் உறவு அடியோடு முறியும்
காசுக்கு ஏத்த தோசை அதுவும் தெரியும்
காசேதான் கடவுள் அதுவும் புரியும்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment