எரிந்து எழுந்த காமன் பண்டிகை
போகாதே என்று சொன்னார் சிவன் போவேன் என்று சொன்னார் பார்வதி
போய்விடு என்று சொன்னார் சிவன்
திரும்பி வந்து நொந்து நின்றார் பார்வதி
கடுந்தவம் கொண்டு அமர்ந்தார் சிவன்
தவத்தைக் கலைக்க முற்பட்டார் பார்வதி
நெடுந்தவத்தைத் தொடர்ந்தார் சிவன்
மன்மதன் உதவியை நாடினார் பார்வதி
ஐம்மலர்கள் அம்பினன் அழகு மன்மதன்
காமனின் பேரழகு மனையாள் ரதி
தவத்தைக் கலைக்க அம்போடு காமன்
தடுக்கப் போராடிய அன்போடு ரதி
சிவன் மீது விட்டார் மலரம்பை காமன்
எரித்தவரிடம் எரிந்தவரைக் கேட்டார் ரதி
ரதிக்கென உருவம் கொண்டார் காமன்
கல்லான காமனைக் கண்டார் ரதி!
"தீயவை தீயோடு போகட்டும்
நல்லவை நிலைத்து நிற்கட்டும்"
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment