உண்மையாகுமா பொம்மை?
தலையாட்டிப் பொம்மையாக இருந்தால்
தன்மானமற்ற வாழ்வை வாழலாம்
எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தால் எல்லோருக்கும் அடிமையாக வாழலாம்
பொம்மைக்கு மகத்துவம் இருப்பதால்
உண்மைக்கு சங்கூதி வாழலாம்
நம்மைப் போல் பொம்மை இருப்பதால்
உண்மையைப் பொய்யாக்கி வாழலாம்
பொம்மையை உட்கார வைத்ததால்
உண்மையை எழாவிடாமல் வாழலாம்
பொம்மையை ஆடம்பரமாக வைத்ததால்
உண்மையைக் கேளியாக்கி வாழலாம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment