Monday, 28 March 2022

போட்டி பொறாமை - மகிழ்ச்சி இகழ்ச்சி

 

போட்டி பொறாமை - மகிழ்ச்சி இகழ்ச்சி

காலைத் தூக்கி விழாது ஓடிப் போய் வென்றால் மகிழ்ச்சி
காலை வாரி தடுமாறி விழ வைத்து வென்றால் இகழ்ச்சி
மற்றவனைவிட அயராது உழைத்து வாழ்ந்தால் மகிழ்ச்சி
மற்றவனை ஏய்த்துப் பிழைத்து வாழ்ந்தால் இகழ்ச்சி
தான் மேன்மேலும் உயரப் பாடுபட்டு வாழ்ந்தால் மகிழ்ச்சி
அடுத்தவனை வாழ விடாது தடுத்து வாழ்ந்தால் இகழ்ச்சி
தான் சார்ந்தோரைவிட பணக்காரனாக வாழ்ந்தால் மகிழ்ச்சி
தான் சார்ந்தோரை ஏழைகளாக்கி வாழ்ந்தால் இகழ்ச்சி!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment