Thursday, 31 March 2022

இட்லியோ இட்லி

 

இட்லியோ இட்லி

தென்னிந்திய சத்தான உணவு வகை இட்லி
தமிழ்நாட்டின் கெத்தான உணவு வகை இட்லி
இருப்போர்க்கும் ஏற்ற உணவு வகை இட்லி
இல்லார்க்கும் ஏற்ற உணவு வகை இட்லி

உளுந்தும் அரிசியும் நன்னீரில் நன்றாக ஊறும்
அரைபட்டு பக்குவமாக மாவாக பூபோல் உருமாறும்
இரவு முழுதும் ஒன்று கலந்து நொதித்துப் பொங்கும்
மாவை அவித்தால் உடனே சாப்பிட மனம் ஏங்கும்

சாம்பாருடன் இட்லிக்கு தாராளக் கூட்டணி
தேங்காய்ச் சட்னியுடன் தரமானக் கூட்டணி
மிளகாய்ச் சட்னியுடன் காரசாரக் கூட்டணி
தக்காளிச் சட்னியுடன் சமபந்திக் கூட்டணி!

- தஞ்சை த இராமநாதன்



No comments:

Post a Comment