இறந்தோரை மறந்தது நன்றோ?
பிறந்தார் இறந்தபின் எங்கே எப்படி மறைந்தாரோ?
இறந்தார் இறந்தபின் எங்கே எப்படி இருக்காரோ?
இறந்தார் இருந்தோரை மறந்து எப்படி மறைந்தாரோ?
இருந்தார் இறந்தோரை மறந்து எப்படி இருக்காரோ?
இறக்குமுன் வலி தாங்காது எப்படித் துடித்தாரோ?
இறந்தபின் விதியை எண்ணி எப்படி இருக்காரோ?
அழுதபோது இறந்தார் கண்மூடி எப்படி
இருந்தாரோ?
இறந்தார் அழும்போது இருப்பார் எப்படி கண்மூடி இருக்காரோ!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment