முட்டாள்கள் பலவிதம்
அநியாயத்தைப் பார்த்து அமைதியாக இருந்தால் முட்டாள்
ஆபத்தை அறிந்தும் அமைதியாக இருந்தால் முட்டாள்
இழிச்சொல் பெற்று அமைதியாக இருந்தால் முட்டாள்
ஈவு இரக்கமற்று நடித்து அமைதியாக இருந்தால் முட்டாள்
வெட்டிப் பேச்சை தட்டிக் கேட்காமல் கெட்டால் முட்டாள்
பொய்யானப் பேச்சை கேட்டுக் கேட்டுக் கெட்டால் முட்டாள்
சொல்லடிக்கு பதிலடிக் கொடுக்காது கேட்டால் முட்டாள்
ஆளுக்காள் அம்பலத்தை அமைதியாகக் கேட்டால் முட்டாள்!
ஆனால்,
ஆசையைத் துறந்து ஆடம்பரத்தை மறந்து அமைதியுடன் அமர்ந்தால்....
யாவரும் உத்தம புத்தனே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment