Thursday, 3 March 2022

மனிதனும் விலங்கும்

 

மனிதனும் விலங்கும்

பசிக்காக விலங்கினம் இன்னொரு விலங்கைக் கொல்லும்
ருசிக்காக மனிதயினம் வேட்டையாடி விலங்கைக் கொல்லும்
வேண்டியதை மட்டும் கொன்று தின்று விலங்கினம் செல்லும்
மிஞ்சியதைக் காய வைத்துத் தின்ன மனிதயினம் செல்லும்
நன்றிக் கெட்ட நாயேயென நாயை மனிதயினம் சொல்லும்
நன்றிக் கெட்டவன் நீயேயென நாய் மனிதயினத்தைச் சொல்லும்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment