Wednesday, 2 March 2022

போர் எனும் பேரில் அக்கப் போர்

 

போர் எனும் பேரில் அக்கப் போர்

ஆக்கப்பட்டதை அழிப்பதற்கு ஒரு போர்
காக்கப்பட்டதை தகர்ப்பதற்கு ஒரு போர்
கர்வத்தை தீர்ப்பதற்கு ஒரு போர்
கவுரவத்தை சேர்ப்பதற்கு ஒரு போர்

கொரோனா செயலால் அந்தப் போர்
கோரமான செயலால் இந்தப் போர்
சரித்திரம் படைக்க இந்தப் போர்
தரித்திரம் கொடுக்க வந்தப் போர்

உலகில் ஒற்றுமையைக் கெடுக்கும் போர்
உலகில் வேற்றுமையைக் கொடுக்கும் போர்
மனித மாண்பை அடியோடு தகர்க்கும் போர்
மனிதப் பண்பை வெடியோடு தகர்க்கும் போர்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment