இனித்தால்தான் பழமா?
பழுப்பாகிப் பழுக்காததெல்லாம் பழமாகிடவும் முடியாது
பழுப்பாகிப் பழுத்ததெல்லாம் பழுத்ததாகிடவும் முடியாது
பழுக்காததைப் பழமென நம்பி சாப்பிடவும் முடியாது
பழுத்ததையும் நலமென நம்பி சாப்பிடவும் முடியாது
பழுத்ததை முயன்றுப் பறிக்காமல் சுவைத்திடவும் முடியாது
பழுக்காததை முயன்றுப் பறித்தாலும் சுவைத்திடவும் முடியாது
பழுத்தப் பழம் யாவும் இனித்திடுமென எண்ணிடவும் முடியாது
பழுத்தப் பழம் எதுவும் கசக்காதென எண்ணிடவும் முடியாது!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment