வருவாயே! வருவாயா?
வெறும் வாயை வைத்தே பெரும் வருவாயைப் பெறுவாயே!
பெறும் வருவாயை வெறும் வாயை வைத்தே வருவாயை விடுவாயே!
வருவாயே பெரும் வருவாயைச்
சிலருக்கு தொடர்ந்துத் தருவாயே!
வருவாயே வரும் சிறு வருவாயைத் தொடர்ந்து பலருக்குத் தருவாயா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment