பொன்னியின் செல்வனே!
பறப்பவை பரபரவெனப் பறந்தாலும்
பறப்பவை யாவும் பருந்தாக முடியுமா?
அக அழுக்கை மறைத்து நடித்தாலும்
முக அழுக்கை மறைக்க முடியுமா?
பணத்தை வைத்து பந்தா செய்தாலும்
குணத்தை பணத்தால் வாங்க முடியுமா?
நரைக்காமல் இருக்க மை தீட்டினாலும்
நரைப்பதையே தடுத்துவிட முடியுமா?
மேடையேறியதும் கத்த முடிந்தாலும்
பாடையேறியதும் கத்த முடியுமா?
பொன்னின் செல்வனாக வாழ்ந்தாலும்
பொன்னியின் செல்வனாக வாழ முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்

சிறப்பு
ReplyDelete🤝🤝
Deleteஅருமை சிறப்பான கவிதை
DeleteSuperb sir_by siva
Delete🙏🤝
DeleteSuper truth
ReplyDelete🙏🙏
ReplyDelete