Monday, 31 October 2022

தாய்க் கோழியின் கதறல்

 


தாய்க் கோழியின் கதறல்

அடைக் காத்துக் காத்து பொரிச்சக் குஞ்சுகளய்யா கொக்கரக்கோ

பாவிப் பருந்துகள் தூக்கிச் செல்வதை              தடுக்க வாருங்களய்யா கொக்கரக்கோ

வரப்போகும் முட்டைகளை நீங்களே
சாப்பிடுங்களய்யா கொக்கரக்கோ

கொஞ்ச நாள் குஞ்சுகளோடு கொஞ்ச கெஞ்சுகிறேனய்யா கொக்கரக்கோ

பதறும் பிள்ளைகளைக் கண்டு கதறிக் கரைகின்றேனய்யா கொக்கரக்கோ

இறக்கையைக் கொடுத்த இறைவா                    பறக்க வைக்காததேன் கொக்கரக்கோ

பிடிக்கப் பட்டாலும் நறுக்கப் பட்டாலும் எங்களின் ஒரே மொழி கொக்கரக்கோ!

- தஞ்சை த.இராமநாதன்


No comments:

Post a Comment