ஆவியைப் போக்கிப் போதித்தல்
நீர் ஆவியாகி தன் கொதிநிலையில் நிலை மாறுவது அழகோ அழகு
நீவிர் ஆளாகி உன் மதிநிலையில் நிலை ஏறுவதும் அழகோ அழகு
தொண்டை வத்த தன் ஆவியைப்
போக்குவது ஆசிரியர் தொழில்
தொண்டு செய்து தன் ஆவியைப் போக்குவதும் ஆசிரியர் தொழில்
உத்யோக தொழில் என்றாலும் அதில் ஆவியைப் போக்குவது ஆசிரியரே
உத்வேக தொழில் என்றாலும் அதில் ஆவியைப் போக்குவதும் ஆசிரியரே
ஆவியைப் போக்கும் ஆசிரியருக்கு அடுத்தவர் பாராட்டு அரைகுறையோடு
ஆவியைப் போக்கும் ஆசிரியருக்கு அன்னையார் பாராட்டோ அக்கறையோடு!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment