காலை மாலை வணக்கம்
காலை வணக்கம் மாலைவரை மலர்ந்து தொடர்ந்தால் மனமெல்லாம் மணக்கும்
மாலை இணக்கம் நாளைக் கடந்து தொடர்ந்தால் காலமெல்லாம் இனிக்கும்
காலையோ மாலையோ காலந்தொட்டு காலைத் தொட்டுத்தான் கும்பிடுவோம்
கலையோ காளையோ அவிழ்த்துவிட்டு கொம்பைத் தொடத்தான் ஓடுவோம்
காலையில் கிழக்கில் வரும் கதிரவனை விளக்கை அகற்றி விடை கொடுப்போம்
மாலையில் மேற்கே போகும் கதிரவனை விளக்கை ஏற்றி விடை கொடுப்போம்
காலையில் உருவான உற்சாகம் மாலையைக் கடந்து கனவாகக் கூடாது
காலையில் உருவான உம் சோகம் மாலையைக் கடந்து நனவாகக் கூடாது!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment