கடைப் பிடித்தல்
நல்ல தடத்தில் நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தால் கரை சேரலாம்
நல்ல இடத்தில் நல்ல பொருட்களைக் கடைப் பிடித்து விற்றால் காசு சேரலாம்
கடைப்பிடித்த கொள்கையைக் காசு வாங்கிக் கொண்டு கை விரிக்காதே
கடையில் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்யக் கடை விரிக்காதே
கடைப்பிடிக்கக் கடைப்பிடிப்பவருக்குக் கடைப்பிடித்தவர்களைப் பிடிக்கும்
கடைப் பிடிக்க கடைப் பிடிக்கும் நபருக்கு காசு கொடுப்பவர்களைப் பிடிக்கும்
கடைசிவரை கடையை நடத்தி காசைச் சம்பாதித்துச் சேர்த்தவர்களும் உண்டு
கடைப்பிடித்த கொள்கைகளைக் கடைசிவரைக் காத்தவர்களும் உண்டு!
- தஞ்சை த.இராமநாதன்

நன்று!
ReplyDelete🙏🙏
ReplyDelete