Sunday, 3 September 2023

அதிபரானார் தர்மன்

 

அதிபரானார் தர்மன்

சத்தங்கள் இல்லாது நடந்தது தேர்தல் சச்சரவுகள் இல்லாது முடிந்தது தேர்தல் கலவரம் இல்லாது நடந்தது தேர்தல்
நிலவரம் தெரிந்ததும் முடிந்தது தேர்தல்

துணைப் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டவர் தர்மன்
அதிபராக அலங்கரிப்படுபவர் தர்மன்
நிதியில் நேர்த்தியானவர் தர்மன்
மதியில் கீர்த்தியானவர் தர்மன்

தர்மனை Dharman எனப் பிழையுடன் எழுதும் தமிழர்கள் பலபேர் உண்டு
Tharman எனச் சரியாக எழுதும் தமிழர் சிங்கையின் அதிபரானது நன்று!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. தர்மன் என்பதை சரியாக எழுதும் தமிழர்-தான்
    தமிழன் என்பதை எடுத்துக்காட்டிய தமிழர்
    தர்மலிங்கத்தின் பிள்ளை பாராட்டிய தமிழர்-எங்க
    தரணி போற்ற வாழ்ந்திடுவார் இந்த தமிழர்
    -நீலகண்டத்தமிழன் +91 74015 74105 ஒருங்கிணைப்பாளர் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா

    ReplyDelete